Tamil(Aided)

DEPARTMENT OF TAMIL

தமிழ்த்துறை வரலாறு

திருச்சிலுவைக் கல்லூரி நாகர்கோவிலில் செயல்படத் தொடங்கிய 1965ஆம் ஆண்டுமுதலே தமிழ்த்துறையும் தம் அரும்பணியைத் தொடங்கிவிட்டது. பகுதி ஒன்று பொதுத்தமிழ் பாடத்திட்டத்தின் மூலம் அனைத்துமாணவிகளுக்கும் மொழிப்பற்றையூட்டும் அரியவாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அருட்சகோதரி எஸ்டலின் முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து திருமதி.அலெக்சாண்டிரியா, முனைவர் ரீட்டாசவரிமுத்து, அருட்சகோதரி ரெஜினா, திருமதி.இந்திரா, முனைவர் பத்மா, முனைவர் சுந்தரபாய், முனைவர் ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி, முனைவர் ரூத் ஜாய், முனைவர் பிரேமாவதி, முனைவர் ஜெயசீலி போன்ற பேராசிரியைகளின் ஆளுமையாலும் ஆற்றலாலும் துறை பலநிலைகளில் வளர்ச்சி கண்டது. 1973ஆம் ஆண்டுமுதல் முத்தமிழ்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடிவருகின்றது. இதனையொட்டி மாணவிகளுக்கு பல்வேறுவகையான போட்டிகள் நடத்தி பரிசளித்து ஊக்கப்படுத்துவதுடன் நலிந்துவரும் நாட்டுப்புறக்கலைக்கும் உயிரூட்டி வருகின்றது. 2005ஆம் ஆண்டுமுதல் சரக்கொன்றை மாணவியர்மலரை வெளியிட்டுத் தமிழன்னையை அலங்கரிக்கின்றது. 2007ஆம் கல்வியாண்டில் கல்லூரி தன்னாட்சிப் பெற்றப்பின் பகுதி ஒன்று பொதுத்தமிழ் பாடத்திட்டத்தைத் தயாரித்து புத்தகவடிவில் அச்சிட்டு வழங்கிவருகின்றது. முன்னாள் மாணவி திருமதி ஆன்ட்ரூசின் நிதிநல்கையால் 2007முதல் வி.வி. அறக்கட்டளைசொற்பொழிவு, 2011முதல் வி.வி.அறக்கட்டளை ஒருநாள் கருத்தரங்கம் போன்றவை நடத்தப்படுகின்றன. முன்னாள் துறைத்தலைவர் முனைவர் ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி அவர்களின் நிதிநல்கையில் 2011 முதல் ரோணிமஸ்ஆராச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவு, 2014 முதல் முனைவர் ஹெர்மனா ஜில்ட்ஆராச்சி அறக்கட்டளைச் சொற்பொழிவு போன்றவை ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகின்றன. 2018ஆம் கல்வியாண்டு முதல் தமிழறிவோம் எனும் பல்கலைக்கழக அளவிலான வினாடிவினா போட்டி நடத்தப்படுகின்றது. முனைவர் பிரேமாவதி, முனைவர் ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி ஆகியோர் கல்லூரிக்கு நல்கிய நிதியிலிருந்து தமிழில் சிறந்த மாணவிகளுக்குப்பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றது. தொடக்கக்காலம் முதலே துறையில் பெரும்பாலான பேராசிரியைகள் முனைவர் பட்டம் பெற்றிருந்தது சிறப்புக்குரியது. இன்றளவும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர் ஆய்வின் வெளிப்பாடாக அதிக எண்ணிக்கையில் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுத் தமிழ்த்துறை கல்லூரி நிர்வாகத்தின் பரிசையும் பாராட்டையும் பெற்றது. இதன் நீட்சியாக முனைவர் பிரேமாவதி- தனிப்பாடல் திரட்டில் தன்னுணர்ச்சிப் பாடல்கள், முனைவர் ஜெயசீலி- இதம் தரும் தோழமை, முனைவர் சுனிதா- காணி இனமக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள் எனும் நூல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையில் குறுந்திட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன் செம்மொழி மத்தியநிறுவனத்தின் நிதியுடன் கருத்தரங்கங்களையும் பயிலரங்கங்களையும் நடத்தி தம் தனித்தன்மையைக் காத்து வருகின்றது. பன்னாட்டு, தேசியஅளவிலான கருத்தரங்கங்களை நடத்தி, ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துவெளியிட்டுள்ளது சிறப்புக்குரியது. தமிழ்த்துறைப் பேராசிரியைகளின் அரும்முயற்சியால் 2011ஆம் கல்வியாண்டு முதல் தமிழை முதன்மைப்பாடமாகக் கொண்ட இளங்கலை பாடப்பிரிவு சுயநிதிதிட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.

தொலைநோக்கு (Vision)

தமிழ்மொழியின் தொன்மையையும் வளர்ச்சியையும் இலக்கியங்களின் வழி அறியலாகும் தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாட்டுக்கூறுகளையும் கற்றுணர்ந்து அவற்றை அழியாமல் பாதுகாப்பதோடு மாணவியரை வேலைவாய்ப்பிற்குத் தகுதிப்படுத்துதல்.

செயலாக்கம் ( Mission)

தமிழ் இலக்கியங்களில் வேரூன்றியுள்ள நன்மதிப்பீடுகளால் ஆழ்ந்தஅறிவும், அறிவுமிளிரும் நல்சமூகமும், சமூகத்தைப்பிரதிபலிக்கும் படைப்புகளும் உருவாக ஊக்கமளித்து மொழியை வளப்படுத்துதல்.

குறிக்கோள்

மொழியின் அடிப்படைத்திறன்களை(கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல்)வளர்த்தல்.

படைப்புத்திறமையை உருவாக்குதல்.

இலக்கியநயத்தைஉணர்ந்து இன்புறச்செய்தல்.

தாய்மொழியில் சிந்திக்கும் ஆற்றலைவளர்த்தல்.

வாழ்வியல் அறங்களைக் கற்பித்து நாகரிகமான,பண்பாடானமனிதராக வாழச்செய்தல்.

From the HOD's Desk

நோக்கம்

       உலகின் மூத்தமொழியான அமிழ்தினும் இனிய தமிழ்மொழியின் செழுமையையும் வளமையையும் அடுத்ததலைமுறைக்குக் கொண்டு செல்லும் சீரியப் பணியினைத் தமிழ்த்துறை செவ்வனே செய்துவருகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வியல் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை முத்தமிழின் முழுசுவையையும் மாணவியர் அறியும் வகையில் பாடத்திட்டம் அமையப்பெற்றுள்ளது. தனிமனிதனின் அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்கும் ஆளுமைவளர்ச்சிக்கும் தாய்மொழியே அடிப்படைக் காரணி. மேலும் அறிவு வளர்ச்சிக்குக் காரணமான சிந்தனையை வளர்க்கும் திறன் தாய்மொழிக்கே உண்டாதலால் இலக்கியங்கள் உணர்த்தும் சமூகமதிப்பீடுகளை உணர்ந்து ஆளுமைத் திறனுடன் வாழ தமிழ் வழிகாட்டுகின்றது. மாணவியரின் அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புத்தகவடிவில் அச்சிட்டு வழங்கப்படுகின்றது. மாணவியரின் பேச்சாற்றலையும், ஆளுமைத்திறனையும் முத்தமிழ் இலக்கியப் படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் களமாக முத்தமிழ்விழாவும் சரக்கொன்றை மாணவியர்மலரும் அமைந்துள்ளது. மேலும் கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், இலக்கியமன்ற கூட்டங்கள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள், களஆய்வுகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தி தாய்மொழிப்பற்றை வளர்த்து மொழிவளர்ச்சிக்குத் துணைநிற்கின்றது. அரசுப்போட்டித்தேர்வுகளில் வெற்றிப் பெற தாய்மொழியாம் தமிழின் தேவையைஉணர்த்தி, மொழிபெயர்ப்புத்துறை, இதழியல்துறை, ஊடகத்துறை, அச்சுத்துறை, பதிப்புத்துறையென வேலைவாய்ப்பிற்குரிய தளமாகத் தமிழ் விரிந்து செல்வதைவிளக்கி, அதற்கேற்ற பயிற்சியையும் அளித்து தமிழ்த்துறை தம்கடமையைச் செவ்வனே செய்துவருகின்றது.

Thanks and Regards,

Dr. M. Justin Buela, M.A., M.Phil., B.Ed., Dip. VANI., Ph.D.

Associate Professor and Head of the Department,

Department of Tamil,

Holy Cross College(Autonomous),

Nagercoil – 4.

Mail id : tamil@holycrossngl.edu.in

Premiers

S.No

Name

Designation

Working duration

Experience

Photo

1

Sr. Estalin

Assistant Professor

1965-1970

5 Years

2

Ms. Alexandria

Assistant Professor

1966-1981

16 Years

3

Ms. Indira

Assistant Professor

1968-1995

27 Years

4

Sr. Regina

Assistant Professor

1970-1976

6 Years

5

Dr. Padma

Assistant Professor

1970-1999

29 Years

6

Dr. Reeta Savarimuthu

Assistant Professor

1967-2002

35 Years

7

Dr. Sundara Bai

Assistant Professor

1972-2003

31 Years

8

Dr. Helmana Gilt Aarachi

Assistant Professor

1976-2012

36 Years

9

Dr. Ruthjai

Assistant Professor

1981-2004

23 Years

10

Dr. Premavathi

Assistant Professor

1983-2010

27 Years

11

Dr. Jeyaseeli

Assistant Professor

1983-2017

34 Years

Faculty Profile

S.No Name Qualification Designation Google Site

1

Dr. S. Thenmozhi

M.A., Ph.D., NET.

Assistant Professor

2

Dr. M. Justin Buela

M.A., M.Phil., B.Ed. Dip. VANI.Ph.D.

Head & Assistant Professor

3

Dr. V. Antony Prakash Babila

M.A., M.Phil., Ph.D.,NET.

Assistant Professor

4

Dr. S. Sunitha

M.A., M.Phil., B.Ed., Ph.D.,NET.

Assistant Professor

5

Dr. M. D. Arun Mozhi Nangai

M.A., B.Ed., M.Phil., Ph.D.

Assistant Professor

Courses Offered

S.No Degree Programme Name Establish Year
1 - PART - I - TAMIL 1965 - 1966

முத்தமிழ் விழா

உயிராகி உணர்வாகி உயர்வாகவாழும் செம்மொழி எம் தமிழ்மொழி. அயல்மொழியின் ஆதிக்கம் பள்ளிகளில் வேரூன்றிய 1970களில் தாய்மொழி காத்திடல் மொழிக்காவலரின் பெரும்பணியாகியது. அக்காலகட்டத்தில் எமது கல்லூரியின் தமிழ்த்துறையினரும் தாய்த்தமிழ் காக்கத்துணிந்ததன் துவக்கமே 1973 இல் தமிழுக்கு விழா எடுக்க துவங்கிய முத்தமிழ் விழா. அன்றுதொட்டு இன்றுவரை இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழான இன்தமிழுக்கு இனியவிழா எடுத்துவருகிறது எம் தமிழ்த்துறை. எழுத்தாளர்கள், சான்றோர்கள் என பலரும்; மாணவியரின் படைப்பாற்றலையும் ஆளுமையையும் வளர்க்கத்தெடுக்கின்றனர். கன்னித்தமிழ் முதல் கணினித்தமிழ் வரை அன்னைத்தமிழின் ஆட்சி, மாட்சிமை பெற்றிட கன்னியர் கல்லூரியில் தமிழ்த்துறையினர் தொடர்ந்து தொல்தமிழுக்கு தோள் கொடுத்து வருகின்றனர்.

பயிலரங்கங்கள்

  1. தொல்லியல் நோக்கில் தமிழும் தமிழர் வரலாறும்- பத்துநாள் பயிலரங்கம், 21.01.2015- 31.01.2015, செம்மொழி மத்திய நிறுவனம் நிதிநல்கை, 30.01.15 -ஒருநாள் களஆய்வு, தேர்வு நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் - முனைவர் இ.சுந்தரமூர்த்தி(மேனாள் துணைவேந்தர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்), திரு.செந்தீநடராஜன்(பண்பாட்டுஆய்வாளர்), முனைவர் வே. வேதாச்சலம், முனைவர் அ.க.பெருமாள்
  2. பேசும்கலை வளர்ப்போம்- ஒருநாள் பயிலரங்கம், 09.01.2018, வி.வி.நினைவு அறக்கட்டளை ஒருநாள் கருத்தரங்கம் மற்றும் தமிழய்யா திருவையாறு இணைந்து நடத்தியது, பங்கேற்ற 104 மாணவிகளுக்கு இளம்நாவலர் விருதும் அதில் சிறந்த பத்து மாணவிகளுக்கு அப்துல்கலாம்விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் - முனைவர் வேலம்மாள், நகைச்சுவை அரசு முனைவர் குருநாதன், மு.கலைவேந்தன்

கருத்தரங்கங்கள்

  1. தமிழ் கவிதைமரபில் பெண் எழுதியதும் பெண்ணைஎழுதியதும் - ஒருநாள் தேசியக் கருத்தரங்கம், 17.09.2012, புரவலர்கள் நிதிநல்கை, முனைவர் ஸ்ரீகுமார்; கட்டுரைத்தொகுதியை வெளியிட்டு சிறப்புரை. சிறப்பு விருந்தினர்கள் -முனைவர் அரங்கமல்லிகா(சென்னை), முனைவர் திருநாகலிங்கம்(புதுவை), முனைவர் நிஷாரபி(கேரளா)
  2. செவ்வியல் இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள் ஒன்றுபடும் புள்ளிகளும் விலகும் புள்ளிகளும் -மூன்று நாள் தேசியக் கருத்தரங்கம், 26,27,28.02.2014, செம்மொழி மத்திய நிறுவனம் நிதிநல்கை, சிறப்பு விருந்தினர்கள் - முனைவர் க.நெடுஞ்செழியன் (மேனாள் தமிழ்த்துறைத்தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்), திரு.சண்முகையா- கட்டுரை சுருக்கம் வெளியிட்டு சிறப்புரை (இயக்குநர், அகில இந்திய வானொலி நிலையம், நாகர்கோவில்).
  3. புலம்பெயர்வு இலக்கியமும் வரலாறும்- இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம், 25,26.02.2016, புரவலர்கள் நிதிநல்கை, சிறப்புவிருந்தினர்- ஏ.பி.எம்.இத்ரீஸ் (எழுத்தாளர்,இலங்கை) -கருத்தரங்க மலர் வெளியிட்டு சிறப்புரை.

இலக்கியமன்றக் கூட்டங்கள்

  1. தேம்பாவணியின் சிறப்புகள்- 10.2.2015, அருள்பணி. விக்டர், இதழியல்கல்லூரிமுதல்வர், திருச்சி.
  2. சங்க இலக்கியங்களில் சிறப்பு மற்றும் நயம்- 16.12.2015, எழுத்தாளர். நீலமதுமயன், நாகர்கோவில்.
  3. உளவியல் பார்வையில் இளையதலைமுறையினர்- 13.012016, திரைப்பட இயக்குநர். திரு. ராஜ்மோகன், கணபதிபுரம்.
  4. படைப்பிலக்கியம் படைப்பது எப்படி- 31.03.2016, திரு.சாமிநாதன்,இந்து பத்திரிகையின் ஆசிரியர்
  5. சிலம்பில் வாய்மொழிவரலாறு- 18.7.2016, முனைவர் அ.க.பெருமாள், முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர், அறிஞர்அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி.
  6. அப்துல்கலாமின் சாதனைகள்- 27.7.2016, பேரா.ஆ.முகமது அஸ்கர், முஸ்லீம் கலைகல்லூரி, திருவிதாங்கோடு
  7. தமிழ் மண்ணே வணக்கம்- 16.12.2016, டாக்டர்.திரு.கு.சிவராமன்,திரு.ப.திருமாவேலன், ஜூனியர் விகடன் ஆசிரியர் பாரதிகிருஷ்ணகுமார்.
  8. முத்தமிழ் விழா- 27.1.2017, முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்,P.S.N. கலைகல்லூரி,கோயம்புத்தூர்.
  9. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்- 12.07.2017, முனைவர் வ.ஜெயசீலி,மேனாள் தமிழ்த்துறைத்தலைவர்,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில்.
  10. கவிஞர் ரசூல் கவிதைகளில் பெண்ணியபார்வை- 18.08.2017, பேரா.ஹாமீம் முஸ்தபா, முஸ்லீம் கலைகல்லூரி, திருவிதாங்கோடு.
  11. முத்தமிழ்விழா- 05.03.2018, அருள்பணி. ஜெகத்கஸ்பர்

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

  1. வி.ரோணிமஸ் ஆராச்சிநினைவுஅறக்கட்டளைச் சொற்பொழிவு- 26.2.2015, எழுதுகோல் எடு, பேரா.ஆ.முகமது அஸ்கர்,முஸ்லீம் கலைகல்லூரி,திருவிதாங்கோடு
  2. ஹெர்மனா ஜில்ட் ஆராச்சிஅறக்கட்டளைச் சொற்பொழிவு- 29.09.2015, கம்பனின் கவிநயம், திரு.அ.சண்முகையா, அகில இந்தியவானொலிநிலைய இயக்குநர், நாகர்கோவில்
  3. வி.வி அறக்கட்டளைசொற்பொழிவு- 7.10.2015, சிறுகதை இலக்கியம், பேரா.ஹாமீம் முஸ்தபா, முஸ்லீம் கலைகல்லூரி, திருவிதாங்கோடு.
  4. வி.ரோணிமஸ் ஆராச்சிநினைவுஅறக்கட்டளைச் சொற்பொழிவு- 19.01.2016, பெண்மையின் தன்னம்பிக்கை, முனைவர் அரசுபரமேஸ்வரன், அறிஞர் அண்ணா அரசுகல்லூரி, நாமக்கல்.
  5. வி.வி அறக்கட்டளைசொற்பொழிவு- 7.10 2016, எழுத்துலக அறிமுகம், திரு.கோதைசிவகண்ணன், எழுத்தாளர், நாகர்கோவில்.
  6. வி.ரோணிமஸ் ஆராச்சிநினைவுஅறக்கட்டளைச் சொற்பொழிவு- 21.10.2016, காப்பியங்களின் சிறப்பியல்புகள், பேரா.ஹாமீம் முஸ்தபா, முஸ்லீம் கலைகல்லூரி, திருவிதாங்கோடு.
  7. வி.வி அறக்கட்டளைசொற்பொழிவு- 04.10.2017, இக்கால இலக்கியங்கள் - படைப்பு சூழல், கவிஞர் திலகபாமா
  8. வி.விநினைவுஅறக்கட்டளைஒருநாள் பயிலரங்கம்- 23.01.2018, பேசும் கலை, முனைவர் மு.கலைவேந்தன், முனைவர் பா.வேலம்மாள், முனைவர் இரா.குகநாதன், முனைவர் நா. துரையரசு
  9. வி.ரோணிமஸ் ஆராச்சிநினைவுஅறக்கட்டளைச் சொற்பொழிவு- 16.04.2018, சிறுகதைபடைப்பாக்கபயிற்சி, பேரா.நடசிவகுமார், நூருல் இஸ்லாம் கலைகல்லூரி, குமாரகோவில்.

சிறுஆராய்ச்சித் திட்டம் (Minor Research Project)

  1. சுனாமி- பேரழிவு அறிக்கை நாளிதழ்ச் செய்திகள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கங்கள், 2005, பல்கலைக்கழகமானியக்குழு, ரூபாய் 1,00,000 நிதி, MRP-2052/06(UGC_SERO)dated 30-12-2005.
  2. மலையாளநாவல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம், 2017, பல்கலைக்கழகமானியக்குழு, ரூபாய் 90,000 நிதிக்குஅனுமதி, முதல்கட்டம்-ரூபாய் 65,000-NO.F MRP6908/16(SERO/UGC)

விருதுகள்

  • செந்தமிழ் திலகம், முனைவர் செ.சுனிதா, 2011,தமிழ்ஐயா கல்விக்கழகம், ஒளவை அறக்கட்டளை,திருவையாறு.
  • ஆய்வுலகச்சிற்பி, முனைவர் செ.சுனிதா, 2013,ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்கள்,நல்லமணி நகர், கொடிக்குறிச்சி.
  • தெய்வதமிழ்ச் சுடர், முனைவர் வ.ஜெயசீலி, முனைவர் செ.சுனிதா, 2013,பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்
  • கபிலர் விருது, முனைவர் செ.சுனிதா, 2013,குறிஞ்சி கபிலர் தமிழ்ச் சங்கம், பரமத்தி வேலூர்
  • கவி ஆய்வுச்சுடர், முனைவர் வ.ஜெயசீலி, பேரா. ம..ஜஸ்டின் பியூலா,முனைவர் செ.சுனிதா, 2014, தமிழ் ஐயாகல்விக்கழகம்,ஒளவைஅறக்கோட்டம்,திருவையாறு.
  • கதை ஆய்வுச் சுடர், முனைவர் செ.சுனிதா, 2015,தமிழ்ஐயா கல்விக்கழகம், ஒளவை அறக்கட்டளை,திருவையாறு.
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க, முனைவர் செ.சுனிதா, 2018,திருவையாறு
  • இளம் நாவலர், 104 மாணவிகள், 23.01.2018, தமிழ் ஐயாகல்விக்கழகம்,ஒளவைஅறக்கோட்டம்,திருவையாறு, பேச்சுக்கலை பயிலரங்கம்
  • அப்துல் கலாம், 10 மாணவிகள், 23.01.2018 , தமிழ்
  • ஐயா கல்விக்கழகம்,ஒளவைஅறக்கோட்டம்,திருவையாறு, பேச்சுக்கலை பயிலரங்கம்
  • சாதனையாளார், முனைவர் வ. ஜெயசீலி, 3.3.2017, புனிதவளனார் கலைஅறிவியல் கல்லூரி,அம்மாண்டிவிளை

நூல் வெளியீடு

சரக்கொன்றை மாணவியர் மலர் கல்விபயிலும் மாணவியர் பாவலராய் நாவலராய் தமிழால் மலர்ந்திட, 2005 முதல் சரக்கொன்றை மாணவியர் மலர் தொடர்ந்து மலர்கிறது. மலைவாழை அல்லவோ கல்வி என்று தலைவாரிபூச்சூடி பாடசாலைக்குப் பெண்களை அனுப்பிவைத்த பாவேந்தனின் தமிழ்நெறி காத்திட கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நகைச்சுவைத்துணுக்குகள், அரியதகவல்கள் எனமாணவியர் பல்திறமும் பக்கங்களில் பதிந்து, இதழின் இதழ்களில் மணம் பரப்பிவருகின்றது. 2005 ஆம் ஆண்டு கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த சரக்கொன்றை பின்னர் கணினி மயமானது. 2018ஆம் ஆண்டு வரை ஒன்பது முறை சரக்கொன்றை மலர் மலர்ந்துள்ளது.

பேராசிரியைகள் எழுதிவெளியிட்டநூல்கள்

  • தனிப்பாடலில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் - முனைவர் செ.பிரேமாவதி, 2006, பதிப்பகம் -பூங்குன்றன் பதிப்பகம், சென்னை.
  • என் பார்வையில் பெண் - முனைவர் செ.பிரேமாவதி(பதிப்பாசிரியர்), 2010, பதிப்பகம் -ராஜா கம்யூனிகேசன், ஆசாரிப்பள்ளம். வெளியீடு- பெண்கள் கல்வி மையம், திருச்சிலுவை கல்லூரி, நாகர்கோவில்
  • காணி இனமக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள் - முனைவர் செ.சுனிதா, 2014, பதிப்பகம்- VINVA எண்:6,கரிகாலன் மேற்குத் தெரு,ஆதம்பாக்கம், சென்னை-83, ISBN978-81-907348-1-2
  • இதம் தரும் தோழமை -முனைவர் வ.ஜெயசீலி, 2017, பதிப்பகம்- கீற்று,1/47A அழகியமண்டபம் , முளகுமூடு-629167. பாடப்புத்தகம் வெளியீடு
  • பகுதி -1 பொதுத் தமிழ் (முதல் பருவம்), 2014, வெளியீடு-தமிழ்த்துறை,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில். பதிப்பகம்-நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ்,அம்பத்தூர்,சென்னை,;ISBN 978-81-2342-659-4.
  • பகுதி -1 பொதுத் தமிழ் (இரண்டாம் பருவம்), 2014,வெளியீடு-தமிழ்த்துறை,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில். பதிப்பகம்-கீற்றுவெளியீட்டகம், 1/47A அழகியமண்டபம் , முளகுமூடு-629167
  • பகுதி -1 பொதுத் தமிழ்(மூன்றாம் பருவம்),2015,வெளியீடு-தமிழ்த்துறை,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில். பதிப்பகம்-கீற்றுவெளியீட்டகம், 1/47A அழகியமண்டபம் , முளகுமூடு-629167
  • பகுதி -1 பொதுத் தமிழ் (நான்காம் பருவம்),2015,வெளியீடு-தமிழ்த்துறை,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில். பதிப்பகம்-கீற்றுவெளியீட்டகம், 1/47A அழகியமண்டபம் , முளகுமூடு-629167
  • பகுதி -1 பொதுத் தமிழ் (இரண்டாம் பருவம்), 2017,வெளியீடு-தமிழ்த்துறை,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில்.
  • பகுதி -1 பொதுத் தமிழ் (முதல்பருவம்), 2018,வெளியீடு-தமிழ்த்துறை,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில்.
  • பகுதி -1 பொதுத் தமிழ் (மூன்றாம் பருவம்), 2018,வெளியீடு-தமிழ்த்துறை,திருச்சிலுவைகல்லூரி,நாகர்கோவில். கருத்தரங்கக் கட்டுரைப்புத்தகம் வெளியீடு
  • செவ்வியல் இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள் ஒன்றுபடும் புள்ளிகளும் விலகும் புள்ளிகளும்- தேசியகருத்தரங்கஆய்வுக்கட்டுரைகள்,2014,பதிப்பு-நட்புபதிப்பகம்,சென்னை,ISBN 978-81-926183-8-8
  • தொல்லியல் நோக்கில் தமிழும் தமிழர் வரலாறும் -தேசியபயிலரங்கஆய்வுக்கட்டுரைகள்,2015,கீற்றுவெளியீட்டகம், 1/47A அழகியமண்டபம் , முளகுமூடு-629167
  • புலம்பெயர்வு- வரலாறும் இலக்கியமும் -பன்னாட்டுகருத்தரங்கஆய்வுக்கட்டுரைகள், 2016,பதிப்பு-நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ்,சென்னை. மாணவியர் மலர் வெளியீடு
  • சரக்கொன்றை (மாணவியர் மலர்)-7,2014,தமிழ்த் துறைவெளியீடு
  • சரக்கொன்றை (மாணவியர் மலர்)-8,2016,தமிழ்த் துறைவெளியீடு
  • சரக்கொன்றை (மாணவியர் மலர்)-9, 2018,தமிழ்த் துறைவெளியீடு

குறிப்பிடத்தக்கவை…

  1. நவீன கற்பித்தல் உத்திகளைக் கையாளுதல்.
  2. பல்கலைக்கழகஅளவில் கவிதை,கட்டுரை,ஓவியம்,பேச்சுப் போட்டிகள் நடத்துதல்.
  3. பன்னாட்டு, தேசிய, மண்டலஅளவிலான கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் நடத்தல்.
  4. ஆண்டுதோறும் முத்தமிழுக்கு விழா எடுத்தல்.
  5. சரக்கொன்றை, பாடப்புத்தகம், கருத்தரங்கக் கட்டுரைகள் போன்றவை நூலாக்கம் செய்து வெளியிடல்.
  6. விருதுபெற்ற படைப்பாளிகளுடன் கலந்துரையாட மாணவிகளுக்கு வாய்ப்பினை உருவாக்குதல்.
  7. ஆசிரியைகளும் மாணவிகளும் அகில இந்திய வானொலியில் நிகழ்சிகள் வழங்குதல்.
  8. இலக்கியங்களில் இடம்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல்.
  9. மாணவிகள் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற வழிகாட்டுதல்.
  10. மாணவிகளின் ஆளுமைத்திறனையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் களமாக முத்தமிழ்விழா, சரக்கொன்றை மாணவியர்மலர், இலக்கியமன்ற கூட்டம், பயிலரங்கம், கருத்தரங்கம், கண்காட்சி, அகமதிப்பீட்டுக் கட்டுரைகள் போன்றவை அமைதல்.
  11. மாணவிகளை ஊக்குவித்து மாவட்ட, பல்கலைக்கழக, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடச்செய்தல். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களைச் சந்தித்து உதவுதல்.

Newsletter

Seminar/Workshop Organized

Prominent Alumnae